கண்டி - பூவெலிக்கடை பகுதியில் ஒருவர் மரணம்! தொற்றாளர்களின் எண்ணிக்கையும் உயர்வு!

கண்டி - பூவெலிக்கடை பகுதியில் ஒருவர் மரணம்! தொற்றாளர்களின் எண்ணிக்கையும் உயர்வு!


கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


கண்டி, பூவெலிக்கடை பகுதியை சேர்ந்த 85 வயது ஆணொருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 14ஆம் திகதி கொரோனா நிமோனியா காரணமாக உயிரிழந்துள்ளார்.


அதன்படி இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 545 ஆக அதிகரித்துள்ளது.


இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 90,000 ஐ அண்மித்துள்ளது. இன்று (20) இரவு 9.00 மணி வரை 346 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 89,843 ஆக உயர்வடைந்துள்ளது.


இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 86,466 பேர் குணமடைந்துள்ளதோடு, 2,645 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.