வாகன சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்த முக்கிய அறிவிப்பு!

வாகன சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்த முக்கிய அறிவிப்பு!


பண்டிகைக்காலத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி திருட்டு அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் செலுத்துநர்கள் தமது வண்டிகளை நிறுத்தும் போது பாதுகாப்பாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.


கடந்த 24 மணி நேரத்தில் பொகவந்தலாவை மற்றும் மட்டக்குளி பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


மேலும் குருநாகல் மற்றும் பூவரசங்குளம் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post