ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவில் பின்னடைவு - புர்கா தடையும் காரணம்!

ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவில் பின்னடைவு - புர்கா தடையும் காரணம்!

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கடுமையான பின்னடைவுகளை ஏற்படுத்திய அசிட் மொழி பேசும் அமைச்சர்களின் வாயை அடக்குமாறு ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடபிரதிநிதி சந்திரபிரேமா அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

சரத் வீரசேகர உள்ளிட்ட அமைச்சர்கள் வெளியிட்ட சில தேவையற்ற அறிக்கைகள் காரணமாக இலங்கை சில நாடுகளின் ஆதரவை இழக்க நேரிடும் என்று சந்திரபிரேமா தெரிவித்துள்ளார்.

புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றை தடை செய்வதற்கான நடவடிக்கை குறித்து சரத் வீரசேகர அளித்த அறிக்கைகளை சந்திரபிரேமா குறிப்பாக குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை ஆதரிக்கும் நாடுகளில் அரைவாசி முஸ்லிம் நாடுகள் என்றும், அதன் காரணமாக அந்த நாடுகளின் உணர்வுகளை புண்படுத்தாமல் இருக்க இலங்கை கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், புர்காவை தடை விதிக்க வர்த்தமானியில் கையெழுத்திட்டுள்ளதாக அமைச்சர் வீரசேகர தெரிவித்திருந்தார். புர்கா தடை தொடர்பில் இதுவரை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post