சாணக்கியன் முஸ்லிம் மக்களின் வாக்குகளினால் முதலமைச்சராவார் என்பது வாயால் வடை சுடும் கதை! -சந்திரகுமார்

சாணக்கியன் முஸ்லிம் மக்களின் வாக்குகளினால் முதலமைச்சராவார் என்பது வாயால் வடை சுடும் கதை! -சந்திரகுமார்


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியானது சிறுபான்மையின மக்களின் ஏகோபித்த வாக்குகளினால் கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி இழந்த அபிவிருத்தியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மேற்கொள்ளுவதற்கு தயாராக இருக்கின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்தார்.

இந்த விடையம் குறித்து மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றால் இப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துள்ள சாணாக்கியன் சிறுபான்மையின முஸ்லிம் மக்களின் வாக்குகளினால் முதலமைச்சராவார் என்பது வாயால் வடை சுடும் நிலைப்பாடாகும், அது நடைபெறாது. கிழக்கு மாகாண சபைத்தேர்தல் நடைபெற்றால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியானது சிறுபான்மையின மக்களின் ஏகோபித்த வாக்குகளினால் கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி இழந்த அபிவிருத்தியை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி மேற்கொள்ளுவதற்கு தயாராக இருக்கின்றது.

கொரோனோ தொற்றுக்காலத்தில் மக்களுக்கு அரிசி வழங்கியும், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், விளையாட்டு அங்கிகள் வழங்கியும், மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கியும், நாடாளுமன்றம் சென்றது போல் இம்முறை சாணாக்கியனால் முதலமைச்சர் ஆக முடியாது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவின் வழிகாட்டல்கள், ஆலோசனையின் மூலம் கிழக்கு மாகாணசபையை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆட்சியை கைப்பற்றும்.

தமிழர்களால் உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரங்கள் தமிழர்களின் கைகளில் இருந்து பறிக்கப்பட்டு சிறுபான்மையின மக்களினதும், அரசியல் வாதிகளின் கைகளுக்கு சென்று கொண்டிருக்கையில் ஆட்சிக்கு வந்த எமது பொதுஜன பெரமுன அரசாங்கம் அதிஸ்டவசமாக ஆட்சி அதிகாரங்களை பற்றிக்கொண்டது. இதனால் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டார்கள். எமது ஆளும் கட்சியில் இரண்டு பேரை நாடாளுமன்றம் அனுப்பியும், அமைச்சராக்கியும் தமிழர்களின் கைகளுக்கு இழந்த அபிவிருத்தியை பெற்றுக் கொடுத்துள்ளோம்.

ஆனால் அண்மையில் நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான எதிர்ப்பு போராட்டத்தை தமிழர்களுக்கான பல பிரச்சனைகளை தீர்த்துவிடலாம் என நம்பிய தமிழ்தேசிய கூட்டமைப்பால் தமிழ் மக்களின் இனப்பிரச்சனையோ, அபிவிருத்தியையோ இதுவரையும் தீர்த்துக் கொடுக்கப்படவில்லை. மாறாக பொத்துவில் முதல் பொலிகண்டி போராட்டத்தினால் மீண்டும் சிறுபான்மையின முஸ்ஸிம் மக்கள் நன்மை அடைந்தார்களே தவிர தமிழ் மக்கள் இதுவரையும் நன்மையடையவில்லை. 

இப்போராட்டத்தில் ஈடுபட்டு தான் வெற்றியடைந்துள்ளதாக நம்பிக்கை கொண்டுள்ள சாணாக்கியனால் இம்முறை மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட்டு சிறுபான்மையின முஸ்லிம் மக்களின் வாக்குகளால் முதலமைச்சராக வரமுடியாது. காலம் காலமாக தமிழ் மக்களின் பிரச்சனையை பிச்சைக்காரனின் புண்ணாக பார்த்ததை தவிர தமிழ் மக்களை ஏமாற்றி, தமிழ் மக்களின் வாக்குவங்கிகளை தமிழ்த்தலைமைகளால் சூறையாடி தாங்கள் மட்டும் வாழனும் எனும் நோக்கில் செயற்படுகின்றது. எமது அரசாங்கத்தினால் சுபீட்சம்மிக்க எதிர்கால அபிவிருத்தி முன்னெடுக்கப்படுகின்றது.

மாகாணசபைக்கு 13 ஆவது திருத்தச்சட்டத்தின் சகல அதிகாரங்களையும் வழங்கி மாகாணசபை முறைமை சிறப்பாக கொண்டு செல்வதற்கு எமது அரசாங்கம் மும்முரமாக செயற்பட்டதோடு தென்னிலங்கை சிங்கள மக்களும் சிறுபான்மையின மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டுமென நம்பிக்கை வைத்திருந்தது.

$ads={1}

ஆனால் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான எதிர்ப்பு போராட்டத்தினால் மாகாண சபைக்கு அதிகாரங்களை வழங்கினால் நாடு பிளவுபடும் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பின் போராட்டத்தினால் தென்னிலங்கை மக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். 

ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் பிரச்சனையானது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசாங்கத்தால் தீர்த்து வைக்க முடியுமே தவிர ஜெனிவால் ஒன்று நடக்காது. ஜெனிவாவில் தமிழ்தேசிய கூட்டமைப்பால் விதைத்த நெல்தான் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டமாகும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.