
சிறையில் இருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீது நுகேகொடை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இன்று மீளப்பெற்றார்.
தற்போது சிறையில் இருக்கும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அனுதாப அடிப்படையில் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக அமைச்சர் அலுத்கமகே தெரிவித்தார்.
டிபெண்டெர் வாகனம் தொடர்பாக ரஞ்சன் ராமநாயக்க அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர் அலுத்கமகே அவதூறு வழக்கு பதிவு செய்திருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னைய அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்காகிய ரஞ்சன், சிறையில் இருந்து திரும்பி வெளியே வரும்போது அதனை நன்கு புரிந்து நடந்துகொள்வார் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
"அவர் ஒரு அப்பாவி, அவர் தவறாக வழிநடத்தப்பட்டு மற்றையவர்களால் பயன்படுத்தப்பட்டார்" என்றும் அமைச்சர் கூறினார்.
இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்தமை தொடர்பாக எம்.பி. ரஞ்சன் ராமநாயக்கக்கு நீதி வழங்க தனிப்பட்ட திட்டத்தை அரசாங்கத்திற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் அலுத்கமகே தெரிவித்தார்.