ஹோட்டலில் தனிமைப்படுத்தலில் இருந்த நபரை கடுமையாக தாக்கிய இராணுவ அதிகாரி - உடனடியாக மருத்துவமனையில் அனுமதி!

ஹோட்டலில் தனிமைப்படுத்தலில் இருந்த நபரை கடுமையாக தாக்கிய இராணுவ அதிகாரி - உடனடியாக மருத்துவமனையில் அனுமதி!

பெந்தொட்டையில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தலில் இருந்த வாரியபொலவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு இராணுவ அதிகாரி ஒருவர் தாக்கியதில் காயமடைந்துள்ளதோடு களுத்தறை நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாகொட மருத்துவமனை பொலிஸார் இன்று (25) தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட நபர் சம்பத் எதிரிசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, குவைத்திலிருந்து இலங்கைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தனிமைப்படுத்தலில் இருந்த நபர், ஹோட்டல் கட்டணமாக ரூ. 290,000 செலுத்தியிருந்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட நபரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது கண் இமைகளில் ஒன்று சேதமடைந்துள்ளதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

களுத்தறை நாகொஎஅ மருத்துவமனையின் 17 வது வார்டில் நோயாளி சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல்நிலை மோசமாக இல்லை, ஆனால் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் களுத்துறை நாகொட பொது மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் தம்பர கலுபோவில மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.