ஒன்றுடன் ஒன்றுடன் மோதவிருந்த புகையிரதங்கள் - கண்டியில் இருந்து புறப்பட்ட புகையிரதம்!

ஒன்றுடன் ஒன்றுடன் மோதவிருந்த புகையிரதங்கள் - கண்டியில் இருந்து புறப்பட்ட புகையிரதம்!

நாவலபிட்டி ரயில் நிலையத்தில் நேற்றிரவு இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து ஏற்படவிருந்த நிலையில், தெய்வாதீனமாக தவிர்க்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாவலபிட்டி ரயில் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சமிக்ஞை வழங்கும் அதிகாரிகள் பணி நீக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பதுளையில் இருந்து கண்டி வரை பயணித்த பொருட்கள் கொண்டு செல்லும் ரயிலும், பயணிகள் ரயில் ஒன்றும் நேற்று இரவு 7.30 மணியளவில் நேருக்கு நேர் மோதவிருந்த சந்தர்ப்பம் தவிர்க்கப்பட்டுள்ளது.

கண்டியில் இருந்து நாவலப்பிட்டி வரை செல்லும் ரயிலின் சாரதி தான் நிறுத்துமிடத்தில் மற்றுமொரு ரயில் இருப்பதனை அவதானித்துள்ளார்.

உடனடியாக செயற்பட்டவர் தான் செலுத்தி வந்த ரயிலை தீவிர முயற்சிகள் மூலம் நிறுத்தியுள்ளார். இதன்போது குறித்த ரயில் பயணிகள் பலர் பயணித்துள்ளதாக ரயில்வே போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளளார்.

இந்த சம்பவத்தால் நள்ளிரவு 12.30 மணி வரை ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் பயணிகளுக்கு ஏற்பட்ட தாமதம் காரணமாக பலர் வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தவறான சமிக்ஞை மற்றும் அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக ஏற்படவிருந்த பாரிய விபத்து நொடி பொழுதில் தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.