புற்றுநோயை அடையாளம் காணும் மருந்து தயாரிப்பு இலங்கையில்!

புற்றுநோயை அடையாளம் காணும் மருந்து தயாரிப்பு இலங்கையில்!

வெரஹர கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக (கேடியு) மருத்துவமனையில் கதிரியக்க மருந்து உற்பத்தி மையத்தை நிறுவுவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மருந்து உற்பத்தி மையத்தில் உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அடையாளம் காண்பதற்காக பெட் மற்றும் சி.டி ஸ்கேன்களில் பயன்படுத்தப்படும் ஃப்ளோரோடொக்சைக்ளூகோஸ் (18 எஃப்-எஃப்.டி.ஜி) தயாரிக்கப்படவுள்ளது.

கதிரியக்க மருந்தை இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றது, ஏனெனில் மருந்து தயாரிக்க பயன்படும் சைக்ளோட்ரான் என்ற சிறப்பு சாதனம் இலங்கையில் இல்லை.

கதிரியக்கச் சிதைவு காரணமாக, மருந்து இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும்போது அதன் திறனில் சுமார் 97% இழக்கப்படுகிறது. மீதமுள்ள திறனில் இருந்து 10 நோயாளிகளுக்கு மாத்திரமே சிகிச்சையளிக்க முடியும்.

ஆண்டுதோறும் சுமார் 30,000 நோயாளிகளை பரிசோதிக்க வேண்டிய அவசியம் இருந்தாலும், இதன் காரணமாக 1600 நோயாளிகளை மட்டுமே பரிசோதிக்க முடியும், மேலும் இறக்குமதி செய்யப்பட்ட மருந்தைப் பயன்படுத்தி ஒரு நோயாளியை பரிசோதிக்க ரூ. 54,000 இனை அரசாங்கம் செலவிடுகின்றது.

மருந்தினை உள்நாட்டில் தயாரிக்கப்பட்டால், செலவை ரூ. 14,000 ஆக குறைத்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்மூலம், இதைக் கருத்தில் கொண்டு, இலங்கையின் அணுசக்தி வாரியத்துடன் இணைந்து வெரஹெர கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனை வளாகத்தில் டியோக்ஸி குளுக்கோஸ் மருந்து உற்பத்தி மையம் ஒன்றை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக மின்வலு அமைச்சர் டல்லஸ் அலகபெரும சமர்ப்பித்த திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளது. (யாழ் நியூஸ்)

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post