
ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் என்னை குற்றவாளிகளாக அடையாளப்படுத்தியே ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
என்னை குற்றவாளி என குற்றம் சுமத்த முடியும், ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை நான் கருத்தில் கொள்ளவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் சிலருக்கு எதிராக குற்றவியல் வழக்கு தொடர வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தாக்குதல் நடத்தப்பட்ட வேளையில் நான் நாட்டில் இருக்கவில்லை, அதேபோல் புலனாய்வு தகவல்கள் எனக்கு வழங்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் பிரதான குற்றவாளிகள் எவரையும் கண்டறிய முடியாது போயுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராயவும் உண்மைகளை கண்டறியவும் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு இப்போது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
$ads={1}
இதில் உண்மையான காரணிகள் எதுவும் வெளிப்படவில்லை. மாறாக என்னை குற்றஞ்சுமத்தும் பரிந்துரைகளை ஆணைக்குழு முன்வைத்துள்ளது.
நாட்டில் குற்றச்சாட்டு சுமத்தப்படாத நபர் யார் உள்ளார்? எனவே இப்போது என்மீதும் அவ்வாறே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை நான் ஒருபோதும் கருத்தில் கொள்ளப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
-ஆர்.யசி