வடக்கின் மூன்று தீவுகளும் சீனாவுக்கே! அமைச்சர் விமல் வீரவன்ச திட்டவட்டம்!

வடக்கின் மூன்று தீவுகளும் சீனாவுக்கே! அமைச்சர் விமல் வீரவன்ச திட்டவட்டம்!


வட மாகாணத்திலுள்ள நயினாதீவு, நெடுந்தீவு மற்றும் அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளையும் இந்தியாவிடம் ஒப்படைக்க அரசு ஒருபோதும் தயாரில்லை என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,


அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதியின் பிரகாரம் குறித்த மூன்று தீவுகளிலும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.


சீன நிறுவனத்துக்கே இந்தத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.


அமைச்சரவையின் அனுமதியையும் மீறி மூன்று தீவுகளுக்கான திட்டங்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு இந்தியா கோருவது சிறுபிள்ளைத்தனமானது.


$ads={1}


வெளிநாடுகள் திட்டங்களுக்கான கோரிக்கையை இலங்கையிடம் விடுக்க முடியும். ஆனால், அது தொடர்பில் அமைச்சரவை தான் இறுதி முடிவெடுக்கும்.


அமைச்சரவை எடுக்கும் தீர்மானத்தை உதாசீனப்படுத்தும் வகையில் எந்தத் தரப்பும் கருத்துக்களை வெளியிடமுடியாது என்றும் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post