வெளிநாடுகளில் தடுப்பூசி போட்டவர்கள் தனிமைப்படுத்தலின்றி இலங்கை திரும்ப நடவடிக்கை!

வெளிநாடுகளில் தடுப்பூசி போட்டவர்கள் தனிமைப்படுத்தலின்றி இலங்கை திரும்ப நடவடிக்கை!

Pavithra Shavendra silva

வெளிநாடுகளில் கொரோனாவுக்கான தடுப்பூசி போட்டவர்கள் தனிமைப்படுத்தல் இன்றி PCR உடன் இலங்கை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதாக தான் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று (11) தெரிவித்துள்ளார்.

 

இதுபற்றி மேலும் அவர் தெரிவித்தாவது, 


"நாங்கள் கடந்த திங்களன்று சுகாதார அமைச்சகத்திடம் இது தொடர்பில் கோரிக்கைஒன்றை முன்வைத்தோம், தொழில்நுட்பக்குழுவுடன் இந்த விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்த அவர்கள் ஒரு வாரம் அவசாகம் கேட்டார்கள், அடுத்த வாரம் தங்கள் முடிவைஅறிவிப்பார்கள்" என்றார்


$ads={1}


மேலும் , தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, தடுப்பூசி போடப்பட்ட புலம்பெயர்ந்தோரை ஏழு நாட்கள் மருத்துவமனை தனிமைப்படுத்தல் முடித்த பின்னர், ஏழு நாட்களுக்கு வீட்டிலேயே சுய தனிமைப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்பதாகவும், இது தொடர்பான முன்மொழிவு சுகாதார அமைச்சிற்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post