விறகு சேகரிக்க சென்ற 26 வயது இளைஞனை காணவில்லை; இரண்டாவது நாளாக தேடும் பணி தொடர்கிறது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விறகு சேகரிக்க சென்ற 26 வயது இளைஞனை காணவில்லை; இரண்டாவது நாளாக தேடும் பணி தொடர்கிறது!


விறகு சேகரிக்கச்சென்று காணாமல் போன இளைஞனை மோப்ப நாயின் உதவியுடன் தேடும் பணியில் பொகவந்தலாவ பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து ஈடுபட்ட போதும் இதுவரையில் கண்டு பிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.


பொகவந்தலாவ குயினா மேல்பிரிவை சேர்ந்த 26 வயதுடைய திருச்செல்வம் பிரபாகரன் என்ற இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.


கடந்த 09 ஆம் திகதி காலை 10 மணியளவில் விறகு சேகரிப்பிற்காக போபத்தலாவ வனப்பகுதிக்குள் சென்றவர் திரும்பி வரவில்லை என பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தின் உறவினர்களால் கடந்த 10 ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


முறைப்பாட்டையடுத்து காணாமல் போன இளைஞனை தேடும் பணியில் பொதுமக்களும் பொலிஸாரும் இரண்டு நாட்களாக போபத்தலாவ காட்டுப்பகுதிக்குள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுட்ட போதும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.


இந்நிலையில் இன்று பொகவந்தலாவ பொலிஸாரினால் ஹட்டன் பொலிஸ் நிலையத்திலிருந்து மோப்ப நாயை வரவழைந்து போபத்தலாவ வனப்பகுதிக்குள் சுமார் 06 மணித்தியாலங்கள் பொலிஸாரும் பொது மக்களும் பாரிய தேடுதல் நடவடிகையில் ஈடுபட்டுள்ளனர்.


சீரற்ற வானிலைக்கு மத்தியில் காலை முதல் ஆரம்பிக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இதுவரையில் குறித்த இளைஞனை கண்டுப்பிடிக்க முடியவில்லை எனவும் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.


இதேவேளை காணாமல் போன இளைஞன் தனது குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையெனவும் பொலிஸார் தெரிவித்ததோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண் வருகின்றமை குறிப்பிடதக்கது. இலங்கை விமானப்படை அதிகாரிகளின் பிரதானி நியமனம் இலங்கை விமானப்படை அதிகாரிகளின் பிரதானியாக எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பயோ, மார்ச் 09ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.


விமானப்படையின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற வைபவத்தின் போது இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவிடமிருந்து எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பயோ தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.