மத்ரஸா மற்றும் புர்கா தடை தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் அமைச்சரவைக்கு!!

மத்ரஸா மற்றும் புர்கா தடை தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் அமைச்சரவைக்கு!!

மத்ரஸா மற்றும் புர்கா ஆடைகள் மீதான தடை தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் அடுத்தவாரம் அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை தயார் செய்யும் பணிகளிலும் ஈடுபட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

நாட்டின் பல பாகங்களிலும் சுமார் 1669 மத்ரஸா பாடசாலைகள் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இவை தவிர, அராபி பாடசாலைகள் என 317 பாடசாலைகளை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post