கொரோனாவின் மூன்றாம் அலை குறித்து பொது சுகாதார பரிசோதகர் சங்கம்!

கொரோனாவின் மூன்றாம் அலை குறித்து பொது சுகாதார பரிசோதகர் சங்கம்!

நாட்டில், கொரோனாவின் மூன்றாவது அலை உதயமாகும் அபாயம் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் சுகாதார அமைச்சினால் அறிவுருத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை உரிய முறையில் கடைப்பிடித்து அதற்கமைய நாம் பண்டிகைகளை கொண்டாட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பண்டிகை காலத்தில் அரசாங்கத்தினால் உரிய வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படாவிடின் பாரிய விளைவுகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்று பொதுசுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது பரவி வரும் தொற்றுநோய் காரணமாக நாம் கொண்டாடவிருக்கும் ஈஸ்டர் பெருநாள் மற்றும் சித்திரை புதுவருட பிறப்பு என்பவற்றை பாதுகாப்புடனும் அவதானத்துடனும் கொண்டாட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இல்லையெனில் இலங்கை மூன்றாவது கொரோனா அலைக்கும் முகம் கொடுக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post