
இது தொடர்பான விசேட கலந்துரையாடல், பரீட்சைகள் திணைக்களம், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் இடையே நடைபெற்றதாகக்
கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, இதுவரை உள்ளடக்கப்பட்ட பாடத்திட்டங்கள் மற்றும் பிரச்சினை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பாடசாலை மட்டத்தில் மேலதிக
தகவல்களைச் சேகரித்த பின்னர் இறுதி முடிவு எட்டப்படும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
க.பொ.த. உயரதரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை என்பன ஓகஸ்ட் மாதத்தில்நடைபெற்று வரும் நிலையில் மாற்றம் குறித்த அறிவிப்பை
கல்வி அமைச்சு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.