வெளிநாட்டு வங்கிக் கணக்குகளிலிருந்து 157 மில்லியன் திருடிய வவுனியா இளைஞன் கைது!

வெளிநாட்டு வங்கிக் கணக்குகளிலிருந்து 157 மில்லியன் திருடிய வவுனியா இளைஞன் கைது!


வவுனியா - வேப்பங்குளத்தில் பணமோசடி குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


29 வயது நபர் குற்றவியல் புலனாய்வுத்துறையால் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அவரது தனியார் வங்கி கணக்கிற்கு ரூ. 17.2 மில்லியன் அமெரிக்காவிலிருந்து வைப்பு செய்யப்பட்டிருந்தது.


2020 ஏப்ரலில் அவரது பல வங்கிக் கணக்குகளிற்கு ரூ. 140 மில்லியன் வைப்பு செய்யப்பட்டிருந்தது.


வெளிநாடுகளில் வசிக்கும் பல்வேறு நபர்களின் கணக்குகளை ஹேக் செய்வதன் மூலம் பணம் அவரது கணக்கிற்கு வைப்பு செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.


இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்ட 36 சந்தேக நபர்கள் ஏப்ரல் 2020 முதல் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.