நாளை போக்குவரத்து மட்டுப்பாடு! பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை!

நாளை போக்குவரத்து மட்டுப்பாடு! பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை!


கல்கிசை தொடக்கம் காலி வீதியூடாக சுதந்திர சதுக்கம் வரையில் நாளை (25) பிற்பகல் 1.00 மணி முதல் போக்குவரத்து மட்டுப்பாடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இலங்கை அமரபுர பிரிவின் மஹாநாயக்க கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதி கிரியைகள் இடம்பெறவுள்ள காரணத்தினால் இவ்வாறு போக்குவர்த்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


நாளை பிற்பகல் 1.00 மணிக்கு அவருடைய உடல் கல்கிசை தர்மபால விகாரையில் இருந்து வாகன பேரணி ஊடாக எடுத்துவரப்பட்டு பிற்பகல் 3.00 மணிக்கு சுதந்திர சதுக்கத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


எனவே மோட்டார் வாகன ஓட்டுனர்கள் மாற்று வீதிகளின் ஊடாக பயணிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.