ஏப்ரல் 04ஆம் திகதி நாடு முழுவதும் விசேட பொலிஸ் இராணுவ பாதுகாப்பு!

ஏப்ரல் 04ஆம் திகதி நாடு முழுவதும் விசேட பொலிஸ் இராணுவ பாதுகாப்பு!


எதிர்வரும் ஏப்ரல் 04ஆம் திகதி ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் நாளை முதல் 05 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என இராணுவம் அறிவித்துள்ளது.


இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன இதனைக் கூறியுள்ளார்.


பாதுகாப்பு அமைச்சின் தீர்மானத்திற்கு அமைய, இந்த பாதுகாப்பு நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.


பொலிஸார் முன்னெடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு, இராணுவத்தினரும் ஒத்துழைப்புக்களை வழங்குவார்கள் என அவர் குறிப்பிடுகின்றார்.


மேலும், அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவிக்கின்றார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.