WATCH: நான் கேட்ட கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை; முடியாதென்றால் சொல்லுங்கள் நான் 422 கிலோ மீட்டர் வரவேண்டிய அவசியம் இல்லை! -சாணக்கியன்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

WATCH: நான் கேட்ட கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை; முடியாதென்றால் சொல்லுங்கள் நான் 422 கிலோ மீட்டர் வரவேண்டிய அவசியம் இல்லை! -சாணக்கியன்


எனது கேள்விகளை சமர்ப்பித்து இரண்டு மாதங்களாகின்றன. இன்னும் பதில் கிடைக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.


இன்றைய தினம் (24) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கேள்வி பதிலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.


இதன்போது கருத்து வெளியிட்ட இரா.சாணக்கியன், “சபாநாயகர் அவர்களே நான் நாடாளுமன்றத்திற்கு வருகை தருவது மட்டக்களப்பிலிருந்து; இதற்கான தூரம் 422 கிலோ மீட்டர் ஆக உள்ளது. நான் எனது கேள்விகளை சமர்ப்பித்து இரண்டு மாதங்களாகின்றன. இன்னும் எனக்குப் பதில் கிடைக்கவில்லை.


நான் உங்களிடம் கேள்வி எழுப்பியது செப்டெம்பர் மாத காலப்பகுதியில் அதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. இவ்வாறான நிலைமை இருக்குமாயின் எங்களுக்கு உடன் தெரிவித்தால் நாங்கள் மட்டக்களப்பிலிருந்து பாராளுமன்றத்திற்கு வர வேண்டிய தேவை இருக்காது.


எங்களுக்கு பேசுவதற்கு பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. இந்த விடயம் சுகாதாரத்துறை சம்மந்தமானது. முக்கியமாக கொரோனா சம்மந்தமான விடயங்கள். செப்டெம்பர் மாதம் சுகாதாரத்துறை அமைச்சரிடம் நான் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்க 03 வாரங்கள் கேட்டிருந்தார்.


இன்னும் அதற்கு பதிலளிக்கவில்லை. எங்களது கேள்விகளுக்கு பதிலளிக்காமையினாலேயே எமது உரிமைகள் உதாசீனம் செயப்படுவதினாலேயே நாங்கள் P2P போன்ற போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது.


ஆனால் இந்த போராட்டங்களை முன்னெடுப்பதற்கு பொலிஸார் தடை உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றனர். இதற்கான பதிலினை அரசாங்க அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அவர்களே அளிக்க வேண்டும்.


நாங்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க 02 வாரங்கள் கேட்டால் நாங்கள் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டிய தேவை இல்லை. நீங்கள் ஏன் எங்களுக்குப் பதிலளிக்க மறுக்கின்றீர்கள்? நாங்கள் கேட்பது மட்டக்களப்பு மாவட்டத்தின் சுகாதாரம் பற்றிய முக்கியமான கேள்விகள்.


ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அவர்களே நான் கிலோ மீட்டர் தூரத்தினைக் கூறியது இதற்காக அல்ல. நான் குறிப்பிட வந்த விடயம் என்னவென்றால் சுகாதாரத்துறை சம்மந்தமான கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என்பதினால் தான். முக்கியமான கேள்விகள் நெடுங்காலமாக இன்னும் பதிலளிக்கப்படாமலேயே உள்ளன.


அதற்காகவே நான் இந்தக் கேள்விகளை வினாவினேன். நான் பிரதமரிடமே அதிக கேள்விகளை வினாவினேன். ஏனெனில் அவரிடம் கேள்விகளை கேட்க முடியுமானதாக இருப்பது வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே. அதனால் தான் நான் அதிக கேள்விகளை அவரிடம் எழுப்பினேன்.


$ads={1}


நீங்கள் பல கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளீர்கள். அதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் இன்னும் சுகாதாரம் சம்மந்தமாக எழுப்பிய கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.


சுகாதாரம் சம்மந்தப்பட்ட விடயம் என்பதனால் இதற்கு மூன்று பேரை இதற்கு நியமிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். அதன் போது கருத்து தெரிவித்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எனது கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் இருந்தால் ஊடகங்களில் என்னைப் பற்றி தவறான கருத்துக்களை முன்வைப்பார்கள். ஆகையினால் இவரது கேள்விகளுக்கு நான் பதிலளிக்கின்றேன்.“ எனத் தெரிவித்தார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.