வாட்ஸாப் Chat இணை டெலிகிராம் ஆப் க்கு நகர்த்த புதிய Tool அறிமுகம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாட்ஸாப் Chat இணை டெலிகிராம் ஆப் க்கு நகர்த்த புதிய Tool அறிமுகம்!


உங்கள் வாட்ஸாப் சாட் ஹிஸ்டரியை அப்படியே டெலிகிராம் ஆப்பிற்கு நகர்த்தும் ஒரு புதிய Tool  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டூலை பயன்படுத்துவது எப்படி, இது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அணுக கிடைக்கிறதா, இதோ முழு விவரங்கள்.

புதிய தனியுரிமை கொள்கைகளின் விளைவாக ஏற்பட்ட வாட்ஸாப்பின் சமீபத்திய பின்னடைவின் பலன்களைப் டெலிகிராம் மற்றும் சிக்னல் ஆப் அனுபவித்து வருகின்றன.

இந்த ஆப்கள் கடந்த ஒரு மாத காலத்துள் பல லட்சம் புதிய பயனர்களைப் பெற்றுள்ளன, மேலும் இந்த இரண்டு ஆப்களின் வளர்ச்சி எந்த நேரத்திலும் நிறுத்தப்படுவதாகத் தெரியவில்லை.

இதற்கிடையில், இன்னும் அதிக எண்ணிக்கையிலான வாட்ஸாப் பயனர்களை ஈர்க்கும் முயற்சியில், இந்த ஆப்கள் பேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸாப் பிறகு இணையான புதிய அம்சங்களைக் கொண்டுவருவதில் தீயாக பணியாற்றி வருகின்றன.

உதாரணமாக, புதிய பயனர்களுக்கு (அதாவது பழைய வாட்ஸாப் பயனர்களுக்கு) மிகவும் பழக்கமான அனுபவத்தை வழங்க சிக்னல் ஆப் கஸ்டம் வால்பேப்பர் மற்றும் அனிமேஷன் ஸ்டிக்கர் ஆதரவை ஆப்பில் சேர்த்தது.

இப்போது, டெலிகிராம் ஆப் அதன் வெர்ஷன் 7.4இல் ஒரு புதிய டூல்-ஐ சேர்க்கிறது, இது பயனர்கள் தங்கள் வாட்ஸாப் சாட் ஹிஸ்டரியை டெலிகிராம் ஆப்பிற்கு எளிதாக நகர்த்த உதவுகிறது.

$ads={1}

Macerkopf தளத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, டெலிகிராம் v7.4 இப்போது iOS பயனர்களுக்கு ஆப்பிள் ஆப் ஸ்டோர் வழியாக வெளிவருகிறது. இந்த அப்டேட் ஒரு புதிய இம்போர்ட் அம்சத்தைக் கொண்டுவருகிறது, இது பயனர்கள் தங்கள் சாட் ஹிஸ்டரியை - வாட்ஸாப், லைன் மற்றும் KakaoTalk உள்ளிட்ட பிற பயன்பாடுகளிலிருந்து டெலிகிராமிற்கு மாற்ற உதவும்.

உங்கள் சாட் ஹிஸ்டிரியை வாட்ஸாப்பில் இருந்து டெலிகிராமிற்கு மாற்ற,

ஆண்ட்ராய்டு வழியாக வாட்ஸ்அப்பில் இருந்து டெலிகிராமிற்கு சாட்களை மாற்றுவது எப்படி?

- வாட்ஸ்அப்பில் குறிப்பிட்ட Chatஐ திறந்து, மேல் வலது மூலையில் உள்ள மூன்று செங்குத்தான புள்ளிகளைத் கிளிக் செய்யவும்.
 
- பின்னர் "Export Chat" என்கிற விருப்பத்தை கிளிக் செய்து Share மெனுவில் Telegramஐ தேர்ந்தெடுக்கவும்.

- மீடியாவுடன் அல்லது மீடியா இல்லாமல் Restore செய்யும்படி கேட்கப்படுவீர்கள். உங்களுக்கு எது விருப்பமோ அதை தேர்வு செய்யவும்.

- இப்போது, டெலிகிராம் உங்கள் மெசேஜ்களை வெற்றிகரமாக மாற்றும் வரை மற்றும் செயல்முறை முடியும் வரை நீங்கள் இம்போர்ட் ஸ்க்ரீனில் காத்திருக்க வேண்டும், அவளவுதான்!


ஐபோன் வழியாக வாட்ஸ்அப்பில் இருந்து டெலிகிராமிற்கு சாட்களை மாற்றுவது எப்படி?

- வாட்ஸ்அப்பில் குறிப்பிட்ட Chatஐ திறந்து, மேலே உள்ள Contact Profile புகைப்படத்திற்கு அருகில் உள்ள பகுதியை கிளிக் செய்யவும்.

- பின்னர் Export Chat என்கிற விருப்பத்தை கிளிக் செய்து Share மெனுவில் டெலிகிராம்-ஐ தேர்ந்தெடுக்கவும், பின்னர் ஆண்ட்ராய்டில் செய்யப்பட்ட அதே வழிமுறைகளை பின்பற்றவும்.


இப்போது குறிப்பிட்ட ZIP Fileஐ டெலிகிராமில் iOS Share Sheet வழியாக இம்போர்ட் செய்ய முடியும். நீங்கள் அவ்வாறு செய்யும்போது, அந்த சாட் இணை நீங்கள் எந்த காண்டாக்ட் அல்லது க்ரூப் உடன் இணைக்க விரும்புகிறீர்கள் என்று டெலிகிராம் உங்களிடம் கேட்கும் என்பதையும் நினைவில் கொள்க.

அதன் பின்னரே குறிப்பிட்ட மெசேஜ்கள் உங்களுக்கும் உங்கள் காண்டாக்ட்டிற்கும் Sync செய்யப்படும். மேலும் எக்ஸ்போர்ட் செய்யப்பட்ட அனைத்து செய்திகளும் வேறு சேவையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்பதைக் குறிக்க லேபிள் செய்யப்படும்.

டெலிகிராம் புதிய Migration Toolஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், சில பயனர்கள் ஆப்பின் சமீபத்திய பதிப்பில் இதை அணுக முடிகிறது.

இந்த அம்சத்தை முயற்சி செய்ய விரும்புபவர்கள், ஆப் ஸ்டோர் மற்றும் பிலே ஸ்டோரிலிருந்து சமீபத்திய அப்டேட்டை பதிவிறக்கலாம். வரவிருக்கும் நாட்களில் டெலிகிராம் நிறுவனம் இந்த அம்சத்தினை இன்னும் பரவலாக வெளியிடும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.