ஐ.நா. வில் இலங்கை தொடர்பான தீர்மானம்! அமெரிக்காவின் நிலைப்பாடு வெளியானது!

ஐ.நா. வில் இலங்கை தொடர்பான தீர்மானம்! அமெரிக்காவின் நிலைப்பாடு வெளியானது!


ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு அமெரிக்கா தமது ஒத்துழைப்புகளை வழங்குமென அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அண்டனி ஜே. பிளிங்கன் தெரிவித்துள்ளார்.


ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 ஆவது அமர்வின் மூன்றாம் நாள் அமர்வுகள் இன்று (24) இடம்பெற்றது


குறித்த அமர்வில் கருத்துரைக்கும் போதே அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அண்டனி ஜே. பிளிங்கன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


அத்துடன், கடந்த காலங்களில் இடம்பெற்ற அட்டூழியங்களுக்கு இலங்கை பொறுப்புக்கூறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், உலகளாவிய ரீதியில் மனித உரிமைகளை பாதுக்காத்தல் மற்றும் மேம்படுத்துவதை அமெரிக்கா முழுமையாக உறுதி கொண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.


$ads={1}


அத்துடன், அமெரிக்கா தற்போது மனித உரிமைகள் பேரவை மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளுடன் மீண்டும் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


நாட்டின், அமைதி மற்றும் ஸ்தீரத்தன்மைக்கு ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் அவசியம் என்பதினால் அதனை அமெரிக்கா தம் வெளியுறவுக் கொள்கையில் உள்ளடக்கியுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அண்டனி ஜே. பிளிங்கன் மேலும் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.