இரண்டு நாள் விஜயத்தை முடித்த பாகிஸ்தான் பிரதமர் விடைபெற்றார்!

இரண்டு நாள் விஜயத்தை முடித்த பாகிஸ்தான் பிரதமர் விடைபெற்றார்!


இலங்கைக்கான இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று (24) மாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.


நாட்டிற்கு வருகை தந்த, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து இன்று கலந்துரையாடியிருந்தார்.


இதேவேளை, 15 முஸ்லிம் பிரதிநிதிகளும் பாகிஸ்தான் பிரதமரை சந்தித்து கலந்துரையாடியதாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் இன்று கலந்துரையாடல் இடம்பெற்றது.


$ads={1}


ஜனாதிபதி செயலகத்தில் முற்பகல் 10.30 அளவில் இந்த சந்திப்பு நடைபெற்றது.


ஜனாதிபதியுடனான கலந்துரையாடலுக்கு பின்னர் பாகிஸ்தான் பிரதமர் கொழும்பில் நடைபெற்ற வர்த்தகம் மற்றும் முதலீட்டு மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார்.


அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய போசனத்திலும் பாகிஸ்தான் பிரதமர் கலந்துகொண்டிருந்தார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post