விரைவில் மாகாண சபை தேர்தல் நடாத்த திட்டம்!

விரைவில் மாகாண சபை தேர்தல் நடாத்த திட்டம்!

எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் மாகாண சபை தேர்தலினை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் இன்று (28) செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்விவகாரம் குறித்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் முன்னாள் மாகாண கவுன்சிலர்களுடன் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்சமயம் மாகாணசபை தேர்தலுக்கு செல்ல அரசாங்கம் ஏன் தூண்டப்பட்டுள்ளது என்பது உடனடியாகத் தெரியவில்லை.

தற்போது அனைத்து மாகாணங்களும் அந்தந்த ஆளுநர்களால் நடத்தப்படுகின்றன. இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்திலும் இந்த பிரச்சினை உள்ளது.

இதேவேளை மாகாணசபை தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் நடைமுறைக்கான சட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்று ஒரு உயர் மட்ட அரசு வட்டாரம் நேற்று கூறியது.

தேர்தல்களை நடத்துவதில் தாமதத்திற்கு இது ஒரு காரணியாக உள்ளதாகவும் சண்டே டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post