அடக்கம் செய்வதில் எமக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை; பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்! -அஸ்கிரிய பீடம்

அடக்கம் செய்வதில் எமக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை; பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்! -அஸ்கிரிய பீடம்

Medagama Dhammananda

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்துள்ளமையில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை.


சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கமைய இந்த விவகாரத்தில் தீர்மானத்தை எடுக்குமாறு தான் நாம் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தினோம் என அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்தார்.


சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் தொடர்பில் அஸ்கிரிய பீடத்தின் நிலைப்பாட்டை வினவியபோதே மெதகம தம்மானந்த தேரர் இதனைத் தெரிவித்தார்.


அவர் மேலும் கூறுகையில், கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வது தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டன. இவ்விடயத்தில் சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கமைய தீர்மானங்களை எடுக்குமாறு நாம் ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தினோம். இது அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய விடயமல்ல. எனவே அவர்களால் இவ்விடயத்தில் தீர்மானம் எடுக்க முடியாது.


$ads={1}


எவ்வாறிருப்பினும் தற்போது இந்த பிரச்சினைக்கான தீர்வு கிடைத்துள்ளது. எனினும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனை வழிகாட்டல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.


-எம்.மனோசித்ரா


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.