மூன்றாவது தடுப்பூசிக்கு உத்தியோகபூர்வ அனுமதி வழங்கிய அமெரிக்கா! முன்னையதைவிட செலவு குறைந்ததாம்!!

மூன்றாவது தடுப்பூசிக்கு உத்தியோகபூர்வ அனுமதி வழங்கிய அமெரிக்கா! முன்னையதைவிட செலவு குறைந்ததாம்!!


Johnson & Johnson கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டாளர்கள் உத்தியோகபூர்வ அனுமதியினை வழங்கியுள்ளனர்.


இதற்கமைய, அமெரிக்காவில் உத்தியோகபூர்வ அனுமதி வழங்கப்பட்ட மூன்றாவது தடுப்பூசியாக Johnson & Johnson தடுப்பூசி பதிவு செய்யப்பட்டுள்ளது.


அத்துடன், முன்னதாக அனுமதி வழங்கப்பட்ட Pfizer மற்றும் Moderna ஆகிய தடுப்பூசிகளுக்கான செலவைவிட குறைந்த செலவில் Johnson & Johnson தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.


மேலும், Johnson & Johnson தடுப்பூசியினை சாதாரண குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்க முடியுமெனவும் சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.


பெல்ஜியத்தின் Janssen நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுள்ள Johnson & Johnson கொரோனா தடுப்பூசியானது  ஒரு முறை வழங்கப்பட்டால் மாத்திரமே போதுமானதென தெரிவிக்கப்பட்டுள்ளது.


$ads={1}


மேலும், எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் 100 மில்லியன் தடுப்பூசியினை அமெரிக்காவிற்கு வழங்குவதற்கு Janssen  நிறுவனம் ஒத்துக்கொண்டுள்ளது.


இதன் முதலாவது தொகுதி அடுத்த வாரம் அமெரிக்க மக்களுக்கு வழங்கப்படுமென சர்வதேச ஊடங்கங்கள் தெரிவிக்கின்றன.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.