பொலிஸாரின் பொதுமக்கள் மீதான வன்முறை! CCTV கேமெராக்கள் பொறுத்த பரிந்துரை!

பொலிஸாரின் பொதுமக்கள் மீதான வன்முறை! CCTV கேமெராக்கள் பொறுத்த பரிந்துரை!

Body cam police sri lanka

இலங்கையில் அண்மையில் பொது மக்கள் மீது பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் வன்முறைகள் அதிகரித்துள்ளன. எனவே எவ்வித பாரபட்சமும் இன்றி சகல பொலிஸ் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கமராக்களை பொறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.


கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் , அண்மையில் இலங்கையில் பொலிஸாரால் பொது மக்கள் மீது முன்னெடுக்கப்படும் வன்முறைகள் அதிகரித்துள்ளன. 


எனவே நீதிமன்ற வளாகத்தில் சி.சி.டி.வி. கமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதைப் போலவே , பொலிஸ் நிலையங்களிலும் பொறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.


அத்தோடு 'உடல் கமராவை' பொலிஸ் உத்தியோகத்தர்களின் சீருடையில் பொறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


தற்போது திட்டமிடப்படாமல் ஒவ்வொரு பிரதேசங்களிலும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகவே தடுப்பூசி வழங்கப்படுகிறது.


$ads={1}


ஆனால் அதனைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் கூட்டமாக செல்வதால் மீண்டும் கொரோனா பரவல் அச்சுறுத்தல் ஏற்படக் கூடும். எனவே தொழிநுட்ப ரீதியில் முறையான தடுப்பூசி வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகின்றோம்.


-எம்.மனோசித்ரா


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.