இலங்கை போக்குவரத்து சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

இலங்கை போக்குவரத்து சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!


Park and Ride - நகர பஸ் சேவைகள் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் கொழும்பு மாவட்டம் முழுவதும் விஸ்தரிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.


நகர்புறங்களில் வாகன நெரிசலைகட்டுப்படுத்தும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பஸ் சேவையானது தற்போது வெற்றிகரமாக இடம்பெறுவதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.


அத்துடன் தேவைகளின் அடிப்படையில் இந்த சேவையினை மேம்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை நீர் கொழும்பு, கண்டி, வீதி மற்றும் காலி வீதியில் இந்த சேவையினை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும்  இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.