கொரோனா தொற்றிலிருந்து மீண்டோரின் உடல் நிலை தொடர்பான புதிய தகவல்!

கொரோனா தொற்றிலிருந்து மீண்டோரின் உடல் நிலை தொடர்பான புதிய தகவல்!

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த பெரும்பாலோரின் உடலில் குறைந்தது ஆறு மாத காலம் நோய் எதிர்ப்புத் தன்மை அதிக அளவில் இருப்பதாகத் கண்டறியப்பட்டுள்ளது.

அத்தகைய நோய் எதிர்ப்புத் தன்மை, அவர்கள் மீண்டும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாக்க உதவுவதாக பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கனவே வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் மீண்டும் அதிவேகமாக நோய்த்தொற்றுக்கு ஆளாவது அரிது என்பதை ஆய்வு உறுதிப்படுத்துவதாக பிரிட்டன் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களில் 99 வீதத்தினரின் உடலில், குறைந்தது மூன்று மாதத்துக்காவது நோய் எதிர்ப்புத் தன்மை நீடித்திருக்கிறது.

88 வீதத்தினரிடம் ஆறு மாதம் வரை நோய் எதிர்ப்புத் தன்மை நீடித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.