இலங்கையின் கூகிள் தளமான google.lk முடக்கம்!

இலங்கையின் கூகிள் தளமான google.lk முடக்கம்!


இன்று காலை இலங்கையில் google.lk இணையதளம் உட்பட பல்வேறு வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இவ்வாறு முடக்கபட்டுள்ள தளங்கள், மாற்று இணையத்தளம் ஒன்றுக்கு இணைக்கப்பட்டிருந்ததாக ஆரம்பக்கட்ட ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.


குறிப்பாக, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் தொடர்பான கோரிக்கை, உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் அந்த தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


அரசியல் கைதிகளின் விவகாரம், ஊடகச் சுதந்திரம், முஸ்லீம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுதல், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான தீர்வு, தமிழில் தேசிய கீதம் பாடப்படுவது நிறுத்தப்பட்டமை, வரலாற்று புத்தகங்களில் தகவல்கள் மாற்றப்பட்டுள்ளமை, வழிபாட்டு தளங்கள் ஆக்கிரமிக்கப்படுதல் மற்றும் நாட்டில் இராணுவமயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும், என பல்வேறு விடயங்கள் அந்த தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில், முடக்கப்படிருந்த இணையத்தளங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


அத்துடன், இந்த இணையத்தள முடக்கத்துடன் தொடர்புடையவர்களை கண்டறிவதற்கான ஆய்வுகள் முன்னெடுக்க்பட்டுள்ளதுடன், விசாரணைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.


 


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.