இலங்கையில் ஜனாஸாக்கள் மீதான கட்டாய தகனம் இடைநிறுத்தப்பட வேண்டும் - ஐ. நா பொது உரிமைகள் பேரவையின் போது இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC)!

இலங்கையில் ஜனாஸாக்கள் மீதான கட்டாய தகனம் இடைநிறுத்தப்பட வேண்டும் - ஐ. நா பொது உரிமைகள் பேரவையின் போது இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC)!

கொரோனா தொற்றினால் உயிரிழந்த ஜனாஸாக்கள் மீதான கட்டாய தகனங்களை நிறுத்துமாறு இலங்கை அரசிடம் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொது உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வின் உயர் மட்டப் பிரிவில் நேற்று (24) உரையாற்றிய் OICயின் பொதுச் செயலாளர் டாக்டர் யூசுப் அல் ஒதமீன் இந்த கோரிக்கையை விடுத்தார்.

OIC யில் அங்கத்துவம் இல்லாத முஸ்லிம் சமூகங்களின் நிலைமையை கண்காணிக்க OIC ஆர்வமாக இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

கொரோனா தொற்றுக்கு இலக்கான உடல்களை (ஜனாஸாக்களை) அடக்கம் செய்வதற்கான உரிமை இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதால், இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சூழ்நிலை குறித்து ஓ.ஐ.சி கவலை தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

பாதிக்கப்பட்ட ஜனாஸாக்களை அடக்கம் செய்வது இஸ்லாமிய வழிமுறைகளை பின்பற்றுவது, உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களையும் கடைப்பிடிப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

முஸ்லிம் சமூகத்தின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான உரிமையை உத்தரவாதம் செய்வதற்கும் மதிப்பதற்கும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை அரசை OIC கேட்டுக்கொள்கிறது என்று டாக்டர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

- எம். ஐ. மொஹமட்

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post