பலவந்தமாக கொரோனா தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள சென்ற அமைச்சர்!

பலவந்தமாக கொரோனா தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள சென்ற அமைச்சர்!

சிலர் பண பலத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி கொரோனா தடுப்பூசியினை வலுக்கட்டாயமாக செலுத்த முற்படுவதாக மருத்துவ ஆய்வக விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களின் சங்கம் தெரிவிக்கின்றது.

அமைச்சர் ஒருவர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்குள் நுழைந்து கொரோனா தடுப்பூசியினை வலுக்கட்டாயமாக செலுத்திக்கொள்ள முயன்றதாக சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தடுப்பூசி திட்டம் திட்டமிடப்படாததாகவும் குழப்பமானதாகவும் மாறிவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் ஒரு ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post