“பயங்கரவாதி சஹ்ரானின் முதல் இலக்கு கிறிஸ்தவ தேவாலயங்கள் இல்லை” - அதிர்ச்சியூட்டும் தகவல்களை உள்ளடக்கிய ஆணயத்தின் அறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

“பயங்கரவாதி சஹ்ரானின் முதல் இலக்கு கிறிஸ்தவ தேவாலயங்கள் இல்லை” - அதிர்ச்சியூட்டும் தகவல்களை உள்ளடக்கிய ஆணயத்தின் அறிக்கை!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் தான் முதலில் கண்டி எசல பெரஹெர தினத்தன்று தாக்குதல் நடாத்த திட்டமிடப்பட்டிருந்ததாக ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. 

பாதுகாப்புப் படையினர் வனாதவில்லுவ பகுதியில் ஆயுதக் களஞ்சியத்தைக் கண்டுபிடித்ததுடன் சிரியா மற்றும் ஈராக்கில் இயங்கி வரும் ஐ.எஸ் அமைப்பு உலகெங்கும் வியாபித்திருக்கும் தமது குழுக்களுக்கு தாக்குதல் நடத்த அழைப்பு விடுத்ததை தொடர்ந்தே ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய ஆயுத களஞ்சியம் 2019 ஜனவரி 16 ஆம் தேதி வனதவில்லுவ பகுதியில் கண்டெடுக்கப்பட்டதோடு, குறித்த வெடிபொருட்களுடன் சஹ்ரான் சம்பந்தப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.


$ads={1}

ஏப்ரல் 4, 2019 தினத்தன்று, இந்திய அதிகாரிகளினால் சஹ்ரான் மற்றும் ஏப்ரல் 21 தாக்குதலின் பிற உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் சாத்தியமான தாக்குதல் தகவல்கள் இலங்கை உளவுத்துறையினருக்கு வழங்கப்பட்ட போதிலும், பாதுகாப்பு செயலாளர், தேசிய புலனாய்வுத் தலைவர், இன்ஸ்பெக்டர் ஜெனரல் காவல்துறை மற்றும் மாநில புலனாய்வு இயக்குனர் தங்கள் கடமைகளை திறம்பட செய்ய தவறியதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

தாக்குதல் தொடர்பாக 2019 ஏப்ரல் 4 வழங்கப்பட்ட தகவலை விடவும், 2019 ஏப்ரல் 20 மாலை உளவுத்துறையினருக்க்கு துல்லியமான தகவல்கள் கிடைக்கப்பெற்ற போதிலும் சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகள் இத்தாக்குதலை தடுத்து நிறுத்த தவறியதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சஹ்ரான் மற்றும் ஏழு தற்கொலை குண்டுதாரர்கள் 2019 ஏப்ரல் 20 அன்று “ஸ்பாட் டவர்” தங்குமிடத்தில் சத்தியபிராமணம் செய்தமையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகருக்கு தெற்கே 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ள காத்தான்குடி நகரமானது தனித்துவமானது மற்றும் நாட்டின் ஒரே ஒரு முஸ்லிம் நகரம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 முஸ்லிமல்லாதவர்கள் காத்தான்குடியில் குடிபெயரவோ, சொத்து வாங்கவோ அல்லது வியாபாரம் செய்யவோ முடியாது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 காத்தான்குடியில் சுமார் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 65 பள்ளிவாயல்கள் இருப்பதாகவும், இப்பகுதியில் சுமார் 50,000 முஸ்லிம்கள் வாழ்ந்து வருவதாகவும் ஆணைய அறிக்கை கூறுகிறது.

இந்த நகரமானது இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மற்ற நகரங்களிலிருந்து வேறுபட்ட பார்வையைக் கொண்டுள்ளதாகவும் பெண்கள் அதன் வீதிகளில் நடமாடும் காட்சிகள் காணப்படாது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குத் தேவையான குண்டுகள் பானந்துரையில் அமைந்துள்ள 'தஸ்மியா வில்லா' என்ற வீட்டில் செய்யப்பட்டதாகவும், கொழும்பில் உள்ள ஹோட்டல்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்த இந்த வீட்டிலிருந்து தற்கொலை குண்டுதாரிகள் வெளியேறியதாகவும் ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மாவனல்லை புத்தர் சிலை விவகாரத்தில் பிரதான சந்தேக நபர்களான ஷஹீத் மற்றும் சாதிக் ஆகியோர் க. பொ. த சாதரண தரம் பயிலும் 30 மாணவர்களுக்கு மஸ்ஜித் தவ்ஹித் எனும் பள்ளிவாயலினுள் ஐ.எஸ் தொடர்பில் கருத்தரங்குகள் நடாத்தப்பட்டதாகவும் ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)

- எம். ஐ. மொஹமட்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.