கெலிஓயா - கழுகமுவ அபிவிருத்தி சங்கத்தின் (KDS) பங்களிப்பில் 08 பாடசாலைகளில் மரம் நடும் நிகழ்வு!

கெலிஓயா - கழுகமுவ அபிவிருத்தி சங்கத்தின் (KDS) பங்களிப்பில் 08 பாடசாலைகளில் மரம் நடும் நிகழ்வு!

Gelioya Kalugamuwa

KDS 2003 O/L Batch இன் சிறந்த முன்மாதிரி


கெலிஓயா - கழுகமுவ அபிவிருத்தி சங்கம் "பசுமையான பாடசாலை, ஆரோக்கியமான சூழல்" எனும் திட்டத்தில் 08 பாடசாலைகளுக்கு சுமார் 150க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கி இத்திட்டத்திட்கு பங்களிப்பு செய்துள்ளனர். இப்பங்களிப்பின் மூலம், இந்நாட்டிற்கு சிறந்த முன்மாதிரி ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.


பாடசாலைகளில் சிறந்த பசுமை சூழலை உருவாக்குவது, மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கும் அவர்களின் உடல் நலத்துக்கும் தேகாரோக்கியத்திற்கும் உறுதுணையாக இருக்கும் என KDS உறுப்பினர்கள் கருதியதன் காரணமாக இச்சமூக பங்களிப்பை அவர்கள் வழங்கியமை பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். 


KDS இன் மேற்படி நன்னோக்கங்களை நிறைவேற்றி வைக்கும் வகையில் "ரம்ய லங்கா நிறுவனம்" களச்செயற்பாடுகளில் அவர்களுக்கு உதவியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.