வீட்டு வேலைகளுக்காக மனைவிக்கு ஊதியம் வழங்க கணவனுக்கு நீதிமன்ற உத்தரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வீட்டு வேலைகளுக்காக மனைவிக்கு ஊதியம் வழங்க கணவனுக்கு நீதிமன்ற உத்தரவு!


சம்பளமே இல்லாமல் வீட்டு வேலை செய்ய வைத்ததற்காக இழப்பீடு வழங்க வேண்டுமென விவகாரத்து வழக்கொன்றில் சீன நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


விவாகரத்து வழக்கில், மனைவி இத்தனை ஆண்டுகளாக வீட்டு வேலை செய்ததற்காக அவருக்கு சம்பளம் வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு சீனாவில் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.


சீனாவில் புதிய சிவில் சட்டம் இந்தாண்டு முதல் அமலுக்கு வந்துள்ளது. இச்சட்டத்தின்படி, வீட்டில் கூடுதல் பொறுப்புகளை சுமந்த கணவன் அல்லது மனைவி அதற்கு ஏற்ற இழப்பீட்டு தொகையை பெற கோரிக்கை விடுக்கலாம்.


பெய்ஜிங் நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு விவாகரத்து வழக்கில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


இவ்வழக்கில், திருமணமான ஐந்து ஆண்டுகளில் குழந்தையை கவனித்துக்கொண்டது, வீட்டு வேலைகளை செய்தது போன்ற பொறுப்புகளை கவனித்தபோது, கணவர் சென் எதையும் கவனிக்காமல், பங்கேற்காமல் அலுவலகத்துக்கு மட்டுமே சென்றதாக மனைவி வாங் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.


$ads={1}


வீட்டு வேலை, குழந்தையை கவனித்துக்கொண்டது ஆகியவற்றுக்கு கூடுதல் இழப்பீடு தேவை என வாங் நீதிமன்றத்தில் கோரியுள்ளார். இதையடுத்து, மனைவி வாங்கிற்கு 50,000 யுவான் (ரூ.1,501,870லட்சம்) இழப்பீடு, குழந்தையை கவனித்ததற்கு இழப்பீடு மற்றும் மாதம் 2000 யுவான் (ரூ.22,500) ஜீவனாம்சம் வழங்க வேண்டுமென பெய்ஜிங் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்த தீர்ப்பு ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. எனினும், 50000 யுவான் இழப்பீட்டு தொகை மிகவும் குறைவு என ஒரு சாரார் விமர்சித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் சீனாவில் விவாகரத்துகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.