இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 26 ஆவது தலைவராக சாலிய பீரிஸ் தெரிவு!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 26 ஆவது தலைவராக சாலிய பீரிஸ் தெரிவு!

saliya peiris

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 26 ஆவது தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


2021ஆம் ஆண்டிற்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் நேற்று (24) முற்பகல் ஆரம்பமானது.


இம்முறை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்காக ஜனாதிபதி சட்டத்தரணிகளான குவேர டி சொய்சா மற்றும் சாலிய பீரிஸ் ஆகியோர் போட்டியிட்டனர்.


ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸிற்கு 5,162 வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி சட்டத்தரணி குவேர டி சொய்சாவிற்கு 2,807 வாக்குகள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளன.


அதற்கமைய, 2,355 மேலதிக வாக்குகளால் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post