
Johnson & Johnson கொரோனா தடுப்பூசி அவசர பயன்பாட்டிற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பான அறிக்கை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் சமர்ப்பித்துள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை அமெரிக்காவில் Johnson & Johnson கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் அமெரிக்காவினால் அங்கீகரிக்கப்பட்ட முன்றாவது தடுப்பூசியாக பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.