சில தரப்பினர் அழுத்தங்கள் கொடுத்து தடுப்பூசி பெற்றுக்கொள்கின்றனர்! -GMOA

சில தரப்பினர் அழுத்தங்கள் கொடுத்து தடுப்பூசி பெற்றுக்கொள்கின்றனர்! -GMOA

Hemantha herath

ஒரு சில தரப்பினர் பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.


ஆகவே அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கும் வரையில் அனைவரும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


"ஒரு சில தரப்பினர் பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றனர். இதனை அனைவருக்கும் வழங்குவதே எமது எதிர்பார்ப்பு. ஆகவே அனைவருக்கும் வழங்கும் வரை பொறுமையுடன் காத்திருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்."


$ads={1}


வரிசை கிரமத்தை மீறி கொரோனா தடுப்பூசிகள் வழங்குவது தொடர்பில் வினவிய போதே அவர் இதனை கூறினார்.


தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முன்னர் நோயாளி தமக்குள்ள நோய்கள் பற்றி தெரிவிப்பது கட்டாயாகும். ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் மாகாண சுகாதார வைத்திய அதிகாரியை சந்தித்து மேலதிக விடயங்களை முன்னெடுப்பதற்கான வசதி உண்டு என்றார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post