புதிய பிரைவசி பாலிசி; விரைவில் புதுப்பிக்கவுள்ள வாட்ஸாப் நிறுவனம்!

புதிய பிரைவசி பாலிசி; விரைவில் புதுப்பிக்கவுள்ள வாட்ஸாப் நிறுவனம்!

whatsapp privacy policy tamil

வாட்ஸாப் நிறுவனம் மேம்பட்ட தனியுரிமைக்கொள்கைக்கான புதுப்பிப்பை விரைவில் வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது.


வாட்ஸாப் நிறுவனம் வரும் வாரங்களில் மேம்படுத்தப்பட்ட பிரைவசி பாலிசியை மீண்டும் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சில வாரங்களுக்கு முன் வாட்ஸாப் வெளியிட்ட புது அப்டேட்டிற்கு உலகளாவிய பயனர்கள் பெரும் எதிர்ப்பை தெரிவிதித்தனர்.


பின்னர் புது அப்டேட் பற்றி வாட்ஸாப் நீண்ட விளக்கம் அளித்தது. மேலும் புதிய மாற்றங்களுக்கு பயனர்கள் ஒப்புதல் வழங்க எதிர்வரும் மே 15ஆம் திகதி எனும் புதிய காலக்கெடுவை பிறப்பித்தது. இத்துடன் வாட்ஸாப் தனது பயனரின் தனிப்பட்ட குறுந்தகவல், குழுக்களில் பகிரப்படும் குறுந்தகவல் உள்ளிட்டவைகளை பார்க்க முடியாது என தெரிவித்தது.


$ads={1}


மேலும் பேஸ்புக் நிறுவனம் வாட்ஸாப் வியாபார அம்சத்தை கையாண்டு, வியாபாரங்கள் புது சேவைகள் மற்றும் அம்சங்களை இயக்க வழி செய்வதாக வாட்ஸாப் தெரிவித்தது. முன்னதாக ஜனவரி மாதத்தில் பயனர்கள் மேம்பட்ட பிரைவசி பாலிசியை ஏற்றுக் கொண்டால் மட்டுமே செயலியை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என தெரிவித்தது.


இதைத் தொடர்ந்து பலர் வாட்ஸாப் செயலியை நீக்கம் செய்து டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற செயலிகளை பயன்படுத்த துவங்கினர். பின் வாட்ஸாப் சர்ச்சைக்குள்ளான பிரைவசி பாலிசி பற்றிய விளக்கத்தை உலகம் முழுக்க விளம்பரங்கள் வாயிலாக பயனர்களுக்கு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.