தங்க விலையின் தற்போதைய நிலவரம் - ஒரே நாளில் பாரிய வீழ்ச்சி!
advertise here on top
advertise here on top

தங்க விலையின் தற்போதைய நிலவரம் - ஒரே நாளில் பாரிய வீழ்ச்சி!

இந்தியா -சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (17) புதன்கிழமை காலை சவரனுக்கு ரூ. 384 குறைந்த நிலையில் தற்போது மாலை நிலவரப்படி சவரனுக்கு மேலும் ரூ. 176 குறைந்துள்ளது.

மேலும் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 560 விலை குறைந்துள்ளது.

அத்தோடு நேற்று செவ்வாய்க்கிழமை ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ. 4 ஆயிரத்து 464 க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ. 560 குறைந்து ரூ. 4 ஆயிரத்து 394க்கு விற்பனையாகிறது.

அதாவது, ஒரு சவரன் தங்கம் விலை இன்று காலை ரூ. 384 குறைந்து ரூ. 35 ஆயிரத்து 328 க்கு விற்பனையான நிலையில் இன்று மாலை மேலும், ரூ.176 குறைந்து ரூ.35,152க்கு விற்பனையாகிறது.

மேலும் ஒரு கிராம் வெள்ளி இன்று காலை நிலவரப்படி ரூ. 74.10 விற்பனை ஆன நிலையில் இன்று மாலை ரூ. 0.50 குறைந்து ரூ. 73.60 விற்பனை செய்யப்படுகிறது.

அத்தோடு சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ. 384 குறைந்த நிலையில் தற்போது மாலை நிலவரப்படி சவரனுக்கு மேலும் ரூ. 176 குறைந்துள்ளது.

மேலும் தொடர்ந்து விலை ஏற்றத்துடன் இருந்த தங்கத்தின் விலை தற்போது 36 ஆயிரம் ரூபா குறைவாக விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

இதேவேளை இலங்கையில் இன்றைய நிலவரப்படி 22 கரட் தங்கம் 90 ஆயிரத்து 650 ரூபாவாகவும் 24 கரட் தங்கத்தின் விலை 98 ஆயிரத்து 850 ரூபாவாகவும் விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.