சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை ஜனாசாக்கள் எரிக்கப்படுவதே நடைமுறையில் இருக்கும்! - சுகாதார அமைச்சு

சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை ஜனாசாக்கள் எரிக்கப்படுவதே நடைமுறையில் இருக்கும்! - சுகாதார அமைச்சு


கொரோனா வைரஸால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ள நிலையில், தொடர்ந்தும் கொரோனா சடலங்கள் தகனம் செய்யப்படும் என்று இலங்கையின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


சுகாதாரச் சேவைகள் உதவிப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.


ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின்படி இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும் வரையில் இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post