திருகோணமலை எண்ணைத் தொட்டி தொடர்பில் இந்திய அரசு அதிரடி தீர்மானம்!

திருகோணமலை எண்ணைத் தொட்டி தொடர்பில் இந்திய அரசு அதிரடி தீர்மானம்!

திருகோணமலை எரிபொருள் எண்ணெய் தொட்டி வளாகத்தை இலங்கைக்கு திருப்பி தருவதற்கு எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

தொட்டி குறித்து மேலும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

2015 மே இல், இந்த தொட்டிகளை கையகப்படுத்த இலங்கை அரசாங்கத்தின் முயற்சியும் தோல்வியடைந்தது.

2003 இல், அப்போதைய அரசாங்கமான ஐக்கிய தேசிய கட்சி இந்த எண்ணெய் தொட்டிகளை லங்கா ஐ.ஒ.சி நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கியது.

திருகோணமலை எண்ணெய் தொட்டிகளை இலங்கைக்கு வழங்க இந்திய அரசு ஒப்புக் கொள்ளவில்லை என்பதையும் நியூஸ் ஏசியா வலைத்தளம் உறுதிப்படுத்தியுள்ளது.

தொட்டிகளை இலங்கைக்கு ஒப்படைக்க இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே ஒப்புக் கொண்டதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post