இலங்கை அணியின் புதிய வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக சமிந்த வாஸ்!

இலங்கை அணியின் புதிய வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக சமிந்த வாஸ்!

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக  சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக டேவிட் சேகர் தமது பதவியினை இராஜினமா செய்துள்ளார்.

இந்நிலையிலே, இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ்  நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

$ads={1}


மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தின் போது இலங்கை அணி மூன்று T20 போட்டி, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.

இந்நிலையில்,  மேற்கிந்திய தீவு மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான  முதலாவது T20 கிரிக்கெட் போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 03 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post