“உங்கள் உயிரை காப்பாற்றியவன் நான், என் மேல் கை வைக்க வர வேண்டாம்” ஜனாதிபதியை எச்சரித்த சரத் பொன்சேகா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

“உங்கள் உயிரை காப்பாற்றியவன் நான், என் மேல் கை வைக்க வர வேண்டாம்” ஜனாதிபதியை எச்சரித்த சரத் பொன்சேகா!

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தனது சமூக ஊடக கணக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எச்சரிக்கை விடுத்து ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளார்.

எதிரிக்கு முன்னால் திறந்த நிலத்தை கடப்பது ஆபத்தானது என்பதை நான் மீண்டும் கோட்டபயவுக்கு நினைவுபடுத்துகிறேன்.

1991 இல் யாழ்ப்பாணக் கோட்டையைக் காப்பாற்றுவதற்கான போரில், நீங்கள் எதிரிக்கு முன்னால் திறந்த வெளியைக் கடந்து விபத்துக்குள்ளானபோது, ​​உங்களையும், உங்கள் படையயும் நான் மற்றும் 1வது சிங்க ரெஜிமேண்ட் ஆகியோரயே காப்பாற்றினோம்.

இன்று, 30 ஆண்டுகளுக்குப் பிறகு, 2021 இல், அரசியல் அரங்கில், நீங்கள் மீண்டும் அதே தவறை செய்ய மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

உங்கள் முகாமின் கட்டளையும் கட்டுப்பாடும் உடைந்துவிட்டது என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது. உங்களுக்கு வாக்களித்த 69 இலட்ச மக்களை கேலி செய்வதன் மூலம், நீங்கள் அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. உங்கள் அதிகாரப் பசியினால் இருக்கும் ஆட்சி அதே அதிமாரத்தினால் அழிக்கப்படும்.

எனவே, கோட்டாபய எனது அறிவுரை என்னவென்றால், நாடு பெரும் நெருக்கடியில் இருக்கும் நேரத்தில், நான் உட்பட பொது எதிர்க்கட்சியின் அரசியல் தலைவர்கள் மற்றும் தோழர்களின் ஜனநாயக உரிமைகளை ஆக்கிரமித்து, மேலும் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகளை அதிகரிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன்”

- சரத் பொன்சேகா முகப்புத்தக பதிவு

🚦"සතුරා ඉදිරියේ තබා ගෙන විවෘත භුමි හරහා ගමන් කිරීම අනතුරුදායක බව මම යලිත් ගෝඨාභයට සිහිපත් කරමි." 1991 යාපනය කොටුව...

Posted by Field Marshal Sarath Fonseka on Saturday, February 6, 2021

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.