தீயிட்டு அழிக்கப்பட்ட 1,380 கிலோ மஞ்சள்!

தீயிட்டு அழிக்கப்பட்ட 1,380 கிலோ மஞ்சள்!

கற்பிட்டி - அம்மாதோட்டம் கடற்கரை பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், புத்தளம் பிரிவின் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட பெருமளவிலான மஞ்சள் நேற்று (07) கற்பிட்டியில் தீயிட்டு அழிக்கப்பட்டது.


குறித்த மஞ்சள் சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கடல் வழியாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


சுமார் 1,380 கிலோ எடை கொண்ட சமையல் மஞ்சளே இவ்வாறு தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.


இதன் பெறுமதி சுமார் 50 இலட்சத்துக்கும். அதிகமாகும் என்பதோடு தற்போதைய சந்தைப் பெறுமதி 96 இலட்சம் ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்தார்.


சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனை மற்றும் உத்தரவுக்கமைய, பொலிஸ் உயர் அதிகாரிகளின் முன்னிலையில் இந்த சமையல் மஞ்சள் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் கற்பிட்டி உதவி பொலிஸ் அத்தியட்சகர் டீ. டீ. பீ. வீரசிங்க தெரிவித்தார்.


-முஹம்மட் ரிபாக்


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.