தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவர் திடீர் மரணம் - ஜனாஸா கொரோனா தொற்று என்று கூறி கட்டாய தகனம்!

தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவர் திடீர் மரணம் - ஜனாஸா கொரோனா தொற்று என்று கூறி கட்டாய தகனம்!

பொகவந்தலாவ தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் சிகிச்சை பெற்று வந்த  கொரோனா தொற்றுக்குள்ளான 78 வயதுடைய இருவரின் தந்தை 07 ஆம் திகதி காலை இறந்துள்ளார்.

உயிரிழந்த நபர் நவலப்பிட்டி பொலிஸ் பிரிவில் ஹபுகஸ்தலவாவில் வசிக்கும் எம்.முபாரக் மற்றும் இருவரின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்வாறு கொரோனா தொற்றுக்கு இலக்கான இவர் கடந்த 29 ஆம் திகதி காலை பொகவந்தலாவ மோரா தோட்டத்திலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் சிகிச்சை பெற்று வந்தபோது அவரது உடல்நிலை மோசமடைந்து 27 ஆம் திகதி காலை டிக்கோயா ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்துள்ளார். 

குறித்த நபர் பல வேறு நோய்வாய்ப்பட்டிருந்தாகவும், கொரோனா காரணமாக உக்கிரமடைந்து இறந்துள்ளராக டிக்கோயா ஆதார மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இருவரின் தந்தையின் இறுதி சடங்குகளை செய்ய உறவினர்கள் மறுத்ததால், அரசாங்கத்தின் செலவில் தகனம் செய்யப்பட்டது என்று டிக்கோயா ஆதார மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி டாக்டர் கலன லோகுஹேவா தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.