
டெய்லி மீரர் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியில், அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை தவிர, வேறு எந்தவொரு நபருக்கும் பாராளுமன்றத்திற்கு பிரவேசிப்பதற்கான தகுதி கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்கு வருகைத் தருகின்றமை அரசியல் ரீதியில் அரசாங்கத்திற்கு நன்மை இல்லாதது என்றாலும், அவர் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டிய ஒருவர் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வலுவான எதிர்கட்சியொன்று அனைத்து சந்தர்ப்பங்களிலும் தேவை என கூறிய பிரதமர், தற்போதைய எதிர்கட்சி பயனற்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் காணப்பட்ட கூட்டு எதிர்கட்சி பயனுள்ளது எனவும், தற்போதுள்ள எதிர்கட்சிக்குள் காணப்படுகின்ற முரண்பாடு ஜனநாயகத்திற்கு சரியில்லை எனவும் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
வலுவான எதிர்கட்சியொன்று இருக்கும் போது, அரசாங்கம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சரியான ஆட்சி முறையொன்றை கொண்டு செல்வதுடன், சவால் விடுக்கவும் முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.