ஈஸ்டர் தாக்குதல் விசாரணையின் இறுதி அறிக்கை; இன்று ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையின் இறுதி அறிக்கை; இன்று ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு!


கடந்த ஏப்ரல் 2019 இல் நடந்த ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணையத்தின் 472 பக்கங்களை கொண்ட இறுதி அறிக்கை இன்று ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டது.


ஜனாதிபதி ஆணைக்குழுவின் உச்சநீதிமன்ற நீதிபதி ஜனத் டி சில்வா இந்த அறிக்கையை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் ஒப்படைத்தார்.


2019 செப்டம்பர் 22 அன்று, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை விசாரிக்க ஜனாதிபதி விசாரணை ஆணையத்தை நிறுவினார்.


தாக்குதல்கள் தொடர்பான முதல் இடைக்கால அறிக்கை 2019 டிசம்பர் 20 அன்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் சமர்ப்பிக்கப்பட்டது, பின்னர் இரண்டாவது இடைக்கால அறிக்கை 2020 மார்ச் 02 அன்று ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.