முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் இந்திய பிரதி உயர் ஸ்தானிகரிடம் ரவூப் ஹக்கீம் விளக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் இந்திய பிரதி உயர் ஸ்தானிகரிடம் ரவூப் ஹக்கீம் விளக்கம்!

rauff hakeem

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் மாகாண சபைகளை முழுமையாக அமல்படுத்துவதன் மூலம் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு குறித்த இந்தியாவின் நீண்டகால மற்றும் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை மீண்டும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜாகோப் தெரிவித்துள்ளார்.


இலங்கைக்கான பிரதி இந்திய உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜாகோப் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவரும் நாடாளு உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (03) புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது பிரதி உயர் ஸ்தானிகர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளதாவது :


ஆரம்பத்திலேயே இலங்கைக்கு இந்தியா தடுப்பூசிகளை வழங்கியமையை வரவேற்பதாக இந்த சந்திப்பின்போது ரவூப் ஹக்கீம் கூறினார். பொருளாதாரம் , நிதி மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல் இதன்போது இடம்பெற்றது.


அண்மைக் காலமாக முஸ்லிம் சமூகத்தினர் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஹக்கீம் கலந்துரையாடலின்போது தெரிவித்தார். அத்தோடு இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர் பற்றியும் அவர் கருத்துக்களை தெரிவித்தார்.


2019 நவம்பர் வரை இலங்கை – இந்தியாவுக்குகிடையிலான தொடர்பாடல்கள் குறித்து இதன்போது பிரதி உயர் ஸ்தானிகர் நினைவு கூர்ந்தார். 2020 செப்டம்பரில் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் நடைபெற்ற மெய்நிகர் மாநாட்டின்போது , ‘இலங்கையில் அனைத்து இன மக்களின் எதிர்பார்ப்புக்களையும் இலங்கை உணர்ந்து செயற்படும்.’ என்று உறுதியளித்திருந்ததையும் இதன்போது பிரதி உயர் ஸ்தானிகர் குறிப்பிட்டார்.


13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் மாகாண சபைகளை முழுமையாக அமல்படுத்துவதன் மூலம் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு குறித்த இந்தியாவின் நீண்டகால மற்றும் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை பிரதி உயர் ஸ்தானிகர் மீண்டும் வலியுறுத்தினார்.


-எம்.மனோசித்ரா


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.