
அரச மருந்தக கூட்டுத்தாபனத்தால் 18 மில்லியன் ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சுதர்ஸனி பெர்னாண்டோ பிள்ளை, 60 வயதுக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி பெற்றக் கொடுக்கப்படும் அதே நேரம் 30 முதல் 60 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீரமானித்துள்ளதாக தெரிவித்தார்.
இந்நாட்டு கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர் 30 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.