
வெல்லம்பிட்டியில் சமீபத்தில் ஒரு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் இன்று (04) பிற்பகல் பொலிஸாருடனான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
வெல்லம்பிட்டி - வெலேவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டை உடைத்து, தங்க நகை திருட்டில் ஈடுபட்ட நான்கு நபர்களில் ஒருவர் என குறித்த சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் துப்பாக்கிச் சூட்டில் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக அஜித் ரோஹன தெரிவித்தார்.